முயற்சி என்பது விதை போல.. அதை விதைத்துக் கொண்டே இரு.. முளைத்தால் மரம். இல்லையென்றால் அது மண்ணிற்கு உரம் - கோ.நம்மாழ்வார்
 
நீங்கள் அக்குபங்சர் கற்றுக்கொள்ள விருப்பமா?
Are you interested in learning acupuncture?
Ad Image
About
ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ற சூழலை உள்வாங்கி வெளிப்படுத்தும் விதமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பயிற்சி மையங்கள் தொடங்கப்பட வேண்டும் என்பது இயற்கை வாழ்வியல் அறிஞர் கோ. நம்மாழ்வார் அவர்களின் விருப்பம். குறிப்பாக இந்த இடம், மாதிரி வாழ்வியல் மையமாக உருவாக வேண்டும் என்பது நம்மாழ்வாரின் விருப்பமாக இருந்தது.
Renowned agricultural scientist and social activist Dr. G Nammalvar said that training centers should be started in various parts of Tamil Nadu, to provide training to people on organic farming, healthy lifestyle, traditional medicine, alternative education and conservation of traditional plants, spices and seeds for making them self sustainable . It was Dr.G Nammalvar's wish that Agaveli should be one of such centers.
இதனை நிறைவேற்றும் வகையில் அறக்கட்டளை சட்டத்தின்கீழ் அகவெளி வாழ்வியல் நடுவம் 2018-ல் தொடங்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் அத்திவெட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பிச்சினிக்காட்டில் அகவெளி வாழ்வியல் நடுவம் அமைந்துள்ளது.
In order to accomplish this, under the Trust Act, Agaveli Lifestyle Center was started in 2018. Agaveli Lifestyle Center is located in Pichinikadu under Athivetti Panchayat of Pattukottai Taluk of Thanjavur District.
About
About
அகவெளி வாழ்வியல் நடுவம் தொடங்கப்படுவதற்கு முன்பிருந்தே அதாவது 1990களில் இருந்து இங்கு இயற்கைவழி வேளாண்மை செய்யப்படுவதோடு நம்மாழ்வார் மூலமாக பல பயிற்சிகளும் கருத்தரங்குகளும் நடத்தப்பட்டுள்ளன.
Since 1990's, organic farming has been practiced here.Biodiversity and many trainings and seminars were conducted with presence of Dr. G Nammalvar prior to Agaveli Lifestyle Center was officialy started.
தற்சார்பு வாழ்வியல் வாயிலாக பல தளங்களில் மக்களை முன்னேற்றும் முனைப்பில் அகவெளி வாழ்வியல் நடுவம் இயங்கி வருகிறது.
At present, Agaveli Lifestyle Center is working towards the advancement of people on many levels through self-reliance.
About
About
  • பல்லுயிர்ச் சூழலுக்கு இசைவான இயற்கை வழி வேளாண் முறைகள் குறித்து பயிற்சி அளித்தல்.
  • மரபு மருத்துவ முறைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
  • Imparting training on organic farming practices that are compatible with biodiversity
  • Creating awareness about traditional medical systems.
  • குழந்தைகளின் தனித்திறன் மற்றும் நற்பண்புகளை வெளிக்கொணரும் சரியான கல்வி முறையை நடைமுறைப்படுத்துதல்.
  • இயற்கை வழியில் விளைந்த வேளாண் விளைபொருட்களை மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்துதல்.
  • To implement the right educational system which brings out the individual talents and virtues of the children.
  • Value-added marketing of organically grown agricultural produce.
About
About
  • பாரம்பரிய கால்நடை இரகங்களை பாதுகாத்தல்.
  • மரபுக் கலைகளை ஊக்குவித்தல்.
  • Conservation of traditional livestock breeds.
  • Promotion of traditional arts.
  • பாரம்பரிய உணவுகள், உணவு முறைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
  • தற்சார்பு வாழ்வியல் முறைகளை ஊக்குவித்தல்.
  • Creating awareness about traditional foods and food systems.
  • Promoting self-reliant livelihoods.
About
About
  • அகவெளி வாழ்வியல் நடுவம், அரசு மற்றும் அரசு சாரா அமைப்புகளுடன் இணைந்து வாழ்வியல் பயிற்சிகளை நடத்தி வருகிறது. நோயில்லா வாழ்விற்கான மரபு மருத்துவத்தின் அவசியம் குறித்த விழிப்புணர்வு வகுப்புகளை நடத்தி வருகிறது.
  • இயற்கை வழி வேளாண்மை பயிற்சிகளை நடத்தி இயற்கையில் விளைந்த பொருட்களை நுகர்வோருக்கு பங்கிட்டுக் கொடுத்து உழவர்களையும் நுகர்வோரையும் இணைக்கும் பாலமாக செயல்பட்டு வருகிறது.
  • Agaveli Lifestyle Center conducts livelihood training in collaboration with government and non-government organizations.
  • Conducting awareness classes on the necessity of traditional medicine for a disease free life.
  • Agaveli Lifestyle Center acts as a bridge between farmers and consumers by conducting organic farming trainings and distributing organic produce to consumers.
  • குழந்தைகளின் தனித்திறனை வெளிக்கொணரும் விதமாக குழந்தைகளுக்கான கோடைக்கால பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது.
  • அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு புத்துணர்வு பயிற்சியை நடத்தி வருகிறது.
  • சமூக நலன் விரும்பும் மக்களை ஒன்றிணைத்து மரபுக்கூடல் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
  • Summer training for children is being conducted to bring out the individuality of children.
  • Conducts refresher training for government and private sector employees.
  • It organizes programs by bringing together people who want social welfare.

About
About
  • கிராம அரசு பள்ளிகளுக்கு தேவையான உபகரணங்களை வழங்கி உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி தருகிறது.
  • நீர்நிலைகளை பாதுகாக்கும் பொருட்டு ஏரி, குளங்களை தூர்வாரும் பணிகளை செய்து வருகிறது.
  • Agaveli provides necessary equipment to rural government schools and improves its infrastructure facilities.
  • In order to protect water bodies, lake and ponds are being dredged.
இயற்கை இடர் தரும் காலங்களில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கி உதவி வருகிறது. குறிப்பாக கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கியும், வீடுகளை இழந்தவர்களுக்கு புது வீடு கட்டிக் கொடுத்தும், சிலருக்கு வீடுகளை சீரமைத்தும் கொடுத்துள்ளது.
In times of natural disasters, people are provided with essential goods. In particular, Agaveli has provided essential goods to the people affected by Cyclone Gaja, built new houses for those who lost their houses and renovated houses for some.

About
About
இயற்கை வழி வேளாண்மை பயிற்சியில் கலந்துகொண்ட பலர் இயற்கை பற்றிய புரிதலோடு இயற்கை வழி வேளாண்மை செய்யத் தொடங்கியுள்ளனர். பூச்சிக்கொல்லி, ரசாயன மருந்து இல்லாத இந்த இயற்கை வழி வேளாண்மையை மன மகிழ்ச்சியோடு செய்வதோடு அவர்களை சுற்றியுள்ள அந்தந்த பகுதியில் உள்ள நண்பர்களுக்கு இயற்கை வேளாண்மை முறைகளை கற்றுத் தருகின்றனர்.
Many people who have attended organic farming training have started organic farming with an understanding of nature. They do this natural method of farming without pesticides and chemicals with joy and teach their friends in their respective areas about organic farming methods.
மரபு மருத்துவ பயிற்சிகளில் பங்கு பெற்றவர்கள் நோய் குறித்த புரிதல் பெற்று உடலை சுயமாக நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்கின்றனர். மேலும் மரபு மருத்துவங்களை கற்றுக்கொண்டு சிகிச்சையாளர்களாகவும் மாறியுள்ளனர். மருத்துவ புரிதலோடு பெண்கள் பிரசவத்தை எளிமையாக்கி கொண்டுள்ளனர். ஏரி,குளங்களை தூர்வாரியதன் மூலம் அந்தந்த பகுதியில் உள்ள நிலத்தடி நீராதாரம் மேம்பட்டுள்ளது.
Those who have participated in traditional medical practices gain an understanding of disease and protect the body itself from disease. They have also learned traditional medicine and become healers. With medical understanding, women have simplified childbirth. By dredging the lakes and ponds, the groundwater in the respective areas has improved
About
About
அகவெளி நடத்தும் பயிற்சிகளில் இணைந்து கொள்வதன் வாயிலாக உழவர்களும் நுகர்வோரும் இணைந்து கொண்டு தங்கள் பொருட்களை பரிமாறி பயனடைகின்றனர். குழந்தைகளுக்கான பயிற்சிகளில் கலந்து கொண்ட குழந்தைகள் தங்கள் சுய திறனை வெளிப்படுத்தும் உற்சாகமான மாணவர்களாக மாறியுள்ளனர்.
Farmers and consumers share and benefit from sharing their products by participating in community-based practices. Children who have participated in training have become enthusiastic students who express their self-efficacy.
அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியதன் விளைவாக அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை விகிதம் அதிகரித்துள்ளது.
Enrollment rate of students in government schools has increased as a result of improvement in infrastructure facilities of government schools.
About